top of page

 தம்மம்பட்டி 

 ஜல்லிக்கட்டு 

தம்மம்பட்டி (ஆங்கிலம்:Thammampatti), 

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும்.

தம்மம்பட்டி ஒரு இயற்கை வளமுள்ள பகுதி.கொல்லிமலை மிக அருகிலும் பச்சமலை தொடர்ச்சி சுமார் 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது

தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு விழாவிற்கு சிறந்த காளை க்கான பரிசு கார் சிறந்த மாடுபுடி வீரனுக்கு இரண்டு சக்கர வாகனம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

விதிமுறைகள்:


போட்டியாளர்கள், காளையின் வால், கொம்பு ஆகியவற்றை பிடித்து, அதன் ஓட்டத்தை தடுத்து நிறுத்தக் கூடாது.

போதை பாதிப்புக்கு உள்ளான காளையை, போட்டியில் பங்கேற்க தடை.

காயம் இருக்கும் காளைகளை, போட்டியில் பங்கேற்க தடை.

வாடிவாசலை மறித்தபடி, போட்டியாளர்கள் நிற்கக் கூடாது. காளையின் திமில் பகுதியை பிடித்தபடி, 15 மீட்டர் அல்லது, 30 வினாடிகள் அளவுக்கு அல்லது மூன்று துள்ளல்கள் வரை,போட்டியாளர்கள் காளையுடன் ஓட வேண்டும்.

போட்டியாளர்களை, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பிரத்யேக சீருடை  அணிந்து இருக்க வேண்டும்

 

© 2023 by Name of Site. Proudly created with Wix.com

  • Facebook Social Icon
  • Twitter Social Icon
  • Google+ Social Icon
bottom of page